சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.மாணிக்கம் தாகூர், எம்.பி. அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/parandur-airport-project-committee-formed-to-deliberate-on-the-congress-partys-stance-and-prepare-a-report




