கொல்கத்தா மேற்கு வங்காளம் விமான நிலையம் அருகே கார் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 30 கார்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மத்யம்கிராம் பகுதியில் ஜெஸ்சூர் சாலையில் சர்வதேச கார் விற்பனையகம் ஒன்று அமைந்துள்ளது. இதில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான சேவை இதுபற்றி தகவல் அறிந்து மத்யம்கிராம் மற்றும் பிரட்டி பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. இதில், யாருக்கும் காயமோ, உயிரிழப்போ இல்லை. ஆனால், விற்பனையகத்தில் இருந்த 30 கார்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. இதனால், ஜெஸ்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த விற்பனையகத்தில் இருந்து 5 முதல் 6 கி.மீ. தொலைவில், டம்டம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எனினும், இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை என பிதன்நகர் காவல் ஆணையரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/west-bengal-car-showroom-fire-near-airport-30-cars-burnt




