ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படம் குறித்தும் நடிகர் நானி குறித்தும், இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் ராகவ் ஜூயல் பதிவிட்டிருக்கிறார். 'தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸுக்கு முன்பு, புரமோஷன் நிகழ்வில் இவருடைய நடனம் வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம். The Paradise Movie நடிகர் ராகவ் ஜூயல், "நமது வாழ்க்கையில் நமக்குத் தெரியாமலேயே நமக்கான ஒரு பாதுகாப்பான இடமாக சிலர் மாறிவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நானி அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான். நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை வார்த்தைகளில் விவரிக்க பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால், எத்தனை சொற்கள் பயன்படுத்தினாலும் அது போதாது என்றே தோன்றுகிறது. சினிமா துறை என்பது பல நேரங்களில் குழப்பமும் நிலையற்ற தன்மையும் நிறைந்த ஒரு சூழலாகவே இருக்கும். எந்தப் பாதையில் செல்வது என்று தெரியாமல் நான் தவித்த சில தருணங்களில், நீங்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். அவர் என்னை அருகில் உட்கார வைத்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். சினிமா, எனது திரைப்பயணம், வாழ்க்கை எனப் பல விஷயங்களைப் பற்றியும், சில நேரங்களில் எதைப் பற்றியுமே இல்லாமல் சாதாரணமாகவும் நாங்கள் உரையாடியிருக்கிறோம். குழப்ப நிலையில் இருந்த என்னை ஒருபோதும் நீங்கள் சிறியவனாகவோ, தாழ்வாகவோ நடத்தியதில்லை. உங்களிடம் பேசி முடித்த ஒவ்வொரு முறையும் என் மனதில் இருந்த பாரம் சற்று குறைந்ததாகவே உணர்வேன். உங்கள் நடிப்புத் திறன், சிந்திக்கும் முறை, நேர்மை, அன்பு, மற்றும் யாருமே பார்க்காத நேரத்தில் ஒரு மனிதராக நீங்கள் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் நான் மிகவும் மதிக்கிறேன். Raghav Juyal ஆனால், இதையெல்லாம் தாண்டி, எனக்கு ஒரு வழிகாட்டி தேவைப்பட்ட அந்த முக்கிய காலகட்டத்தில் உங்களைப் போன்ற ஒரு மனிதரை என் வாழ்க்கையில் தந்ததற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நானி எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். நான் எப்போது போன் செய்தாலும் அதை ஏற்றுக்கொண்டு, நான் தொலைந்துபோனதாக உணர்ந்த தருணங்களில் பொறுமையுடன் என்னுடன் பேசியதற்கு நன்றி. சிலர் சினிமா பயணத்திற்கு வழிகாட்டுவார்கள். சிலர் அமைதியாக நம் மனதை ஒருங்கிணைத்துத் தாங்கிப் பிடிப்பார்கள். நீங்கள் எனக்கு இவை இரண்டையுமே செய்திருக்கிறீர்கள், நானி!" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/tollywood/raghav-juyal-emotional-note-actor-nani-the-paradise




