நியூயார்க் பயங்கரவாத ஆதரவு தொடர்பான பாகிஸ்தானின் கேள்விக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதிலடி அளித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 81-வது கூட்டத்தொடர் நடந்தது. அப்போது நிருபர்கள் சந்திப்பின்போது, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் பாகிஸ்தான் நிருபர் ஒருவர், உங்கள் அரசு பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை எப்போது நிறுத்தும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெய்சங்கர், ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறது என்று பதிலடியாக கூறினார். தொடர்ந்து இந்தியாவின் ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி, உங்கள் கேள்விக்கான பதிலை தெளிவாக கேட்டுவிட்டீர்கள் என்று கூறினார். பயங்கரவாத தாக்குதல் இதனை தொடர்ந்து, மத்திய மந்திரி ஜெய்சங்கர் மற்றும் அவருடைய குழுவினர் உடனடியாக எழுந்து அறையை விட்டு வெளியேறினர். கடந்த காலங்களில், இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருந்துள்ளது. இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், நேபாளி ஒருவர் உள்பட அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடனான தொடர்பு தெரிய வந்தது. ஆபரேஷன் சிந்தூர் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வரும் ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மே 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதில், முசாபராபாத், கொத்லி, பஹவல்பூர், ராவலகோட், சக்ஸ்வரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகிய 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவை தரைமட்டம் ஆக்கப்பட்டன. இவற்றில், 4 இடங்கள் பாகிஸ்தானிலும், 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்தன. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/terrorism-support-jaishankar-slams-pakistan-question




