தூத்துக்குடி, தூத்துக்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலகத்தில் கொடிய விஷம் கொண்ட சுருட்டை விரியன் பாம்பு ஒன்று பிடிபட்டது. தூத்துக்குடி 2-ஆவது கேட் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அலுவலக வளாகத்தில் பாம்பு ஒன்று இருப்பதாகத் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. சுருட்டை விரியன் பாம்பு பிடிபட்டது அந்த தகவலை தொடர்ந்து, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அலுவலகத்தில் புகுந்த கொடிய விஷம் உள்ள சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-a-coiled-viper-snake-was-caught-after-entering-the-charities-department-office




