இன்றைய காலத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி, சிம் கார்டு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு ஆதார் அவசியமாக இருப்பதால், அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆதாரில் உள்ள விவரங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று டெமோகிராபிக் தகவல்கள் (பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் போன்றவை), மற்றொன்று பயோமெட்ரிக் தகவல்கள் (விரல்ரேகை, கருவிழி பதிவு, முகப்புகைப்படம்). ஆதாரில் உள்ள தகவல்கள், உங்கள் பிற ஆவணங்களில் உள்ள விவரங்களுடன் பொருந்தவில்லை என்றால் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே தேவையான திருத்தங்களை சரியான நேரத்தில் செய்து வைத்திருப்பது நல்லது. பெயரை எத்தனை முறை மாற்றலாம்?: ஆதார் அட்டையில் உள்ள பெயரை பொதுவாக 2 முறை வரை மாற்ற அனுமதி உள்ளது. ஆனால், சிறிய அளவிலான திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்படும். பாலினம் மற்றும் பிறந்த தேதி: ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். அதேபோல் பிறந்த தேதியையும் ஒரு முறை மட்டுமே திருத்த அனுமதி வழங்கப்படுகிறது. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம்: முகவரியை மாற்றுவதற்கு நிரந்தர வரம்பு எதுவும் இல்லை. தேவைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை புதுப்பித்துக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் முக்கியம்: ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க, ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். OTP சரிபார்ப்புக்காக அந்த மொபைல் எண் அவசியம். கவனிக்க வேண்டியது: ஆதார் விவரங்களில் மாற்றம் செய்யும்போது, உரிய ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகவல்களை புதுப்பிக்கும் முன், தற்போதுள்ள விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து, தேவையான மாற்றங்களை மட்டும் மேற்கொள்வது சிறந்தது. தலைமுடி பராமரிப்பில் இந்த தவறுகளை செய்கிறீர்களா? உடனே நிறுத்துங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/how-many-times-can-you-change-aadhaar-details-important-information-you-need-to-know




