கயானா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், ஜெய்டன் லெனாக்ஸின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லெனாக்ஸ் அபார பந்துவீச்சு அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அற்புதமான் அதொடக்கம் கிடைத்தது. விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை முழுமையாக மாற்றினர். குறிப்பாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜெய்டன் லெனாக்ஸ் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி, 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை (5/19) கைப்பற்றினார். இதனால், 63 ரன்களுக்கு விக்கெட் இழக்காத நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டாம் லாதம் அசத்தல் இதையடுத்து 139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் தொடக்கம் சவாலாகவே அமைந்தது. அந்த அணி 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பொறுப்புடன் விளையாடிய டாம் லாதம், ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் சமநிலை இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி வியாழக்கிழமை கயானாவில் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/jayden-lennox-takes-519-as-new-zealand-beat-west-indies-to-make-it-1-1-in-odi-series




