செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (19). கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அலிஷா நிலோபர் (19). தோழிகளான இருவரும் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே மொபட்டில் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் மொபட் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே மாணவி பலி கார் மோதியதில் மொபட்டில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் மற்றொரு மாணவி உயிரிழப்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அலிஷா நிலோபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அலிஷா நிலோபரும் பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவர் கைது இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-near-guduvancheri-two-college-students-killed




