சென்னை, சென்னை தெற்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 'வைப்பு நிதி உங்கள் அருகாமையில்' என்ற தலைப்பிலான குறைதீர்க்கும் முகாம் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கீழ்ப்பாக்கம் தவுலத் டவர்ஸ் 7-வது மாடியில் உள்ள எக்ஸ்.பி.பி. ஆசியா அலுவலகத்தில் நடைபெறும். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உள்பட வைப்பு நிதி தொடர்புடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களுடைய கோரிக்கைகளை, குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி அலுவலகம் சார்பில், சென்னை மூலக்கடையில் உள்ள ஈ.எஸ்.ஐ. கிளை அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை வைப்பு நிதி உங்கள் அருகாமையில் என்ற தலைப்பிலான குறைதீர்க்கும் முகாம் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் என்று வருங்கால வைப்பு நிதி கமிஷனர் நிஷா ஒவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/provident-fund-grievance-redressal-camp-in-chennai-on-the-28th




