சென்னை, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான விஸ்வநாதன், சட்டமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- “வாழ்க்கை துவங்குகிற பொழுது சிலருக்கு வசந்தமாக துவங்கும், சிலருக்கு வசதியோடு துவங்கும். ஆனால் வாழ்க்கை எனக்கு துவங்குகிற பொழுது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. நானே எனது வாழ்க்கையை உருவாக்கி, குட்டை, குளங்களிலும், ஓடுகிற நதியிலும் என் ஆடைகளை துவைத்து, சைக்கிளை மிதித்து, தினந்தோறும் தினத்தந்தி பத்திரிகையை படித்து வளர்ந்து, அரசியல் ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிறேன். ஒரு அரசியல் தலைவராக நான் பெருமையோடு இங்கு நிற்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாளைய வருங்காலத்தின் பிரதமர், என் தலைவர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை எனக்கு கொடுத்திருக்கிறார். நான் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவன். ஆனால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒருவனை, நான் அனுப்பிய ஒரு ஆடியோவின் மூலமாக, ‘நான் ஒதுக்கப்பட்டேன், வாய்ப்புகளை எனக்கு வழங்கித்தான் ஆக வேண்டும்’ என்று என் தலைமைக்கு நான் கொடுத்த வேண்டுகோளின் காரணத்தினால், ஒரே இரவில் அந்த குரல் என் தலைவனுக்கு கேட்டது. மறுநாள் காலை மேலூர் சட்டமன்ற பொதுத்தொகுதியின் வேட்பாளராக நான் ஆக்கப்பட்டேன்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-grew-up-reading-dina-thanthi-said-minister-viswanathan-in-the-legislative-assembly



