முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 100-வது நாளில் அடியெடுத்து வைத்திருப்பதை முன்னிட்டு, முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில், "தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" என்று குறிப்பிட்ட அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அரசு நிறைவேற்றிய முக்கியத் திட்டங்களையும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' அமைக்கப்பட்டதுடன், அம்மாக்கள் மற்றும் கை குழந்தைகளுக்கான 'தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி 100 Days of Governance A Government for Generations#CMJosephVijay — CMOTamilNadu (@CMOTamilnadu) August 17, 2026 மேலும், 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' வாயிலாக ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவ 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டது உட்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதையும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tvk-has-reached-its-100th-day-in-office




