“ஆக்ஷன் கிங்” அர்ஜுன் பிறந்த நாளையொட்டி தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் 1992-ல் வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’ என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கியிருந்தார். இவர் கன்னட படங்களில் நடித்த நிவேதிதாவை 1988-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த 2024 ம் ஆண்டு திருமணம் நடந்தது. அர்ஜுன் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். நீணட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் “சீதா பயணம்” என்ற புதிய திரைப்படத்தை அர்ஜுன் இயக்கியிருந்தார். வெற்றி பெற்ற ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. பிறந்த நாள் வாழ்த்துகள் விராவி தெலுங்கு இயக்குநர் டாக்டர் அனில் விஸ்வநாத் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் புகைப்படத்தினை பகிர்ந்து, “பிறந்த நாள் வாழ்த்துகள் விராவி” என குறிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/action-king-arjuns-birthday-the-film-crew-wishes-him-by-releasing-a-poster




