Doctor Vikatan:என் வயது 52. நான் இத்தனை வருடங்களாக சரியான எடையில்தான் இருந்தேன். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறேன். இப்போது மெனோபாஸ் வந்துவிட்டதால், எடை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதே உணவுப்பழக்கம், உடற்பயிற்சியைத் தொடர்கிறேன். ஆனாலும் எடை அதிகரிப்பது ஏன்? மெனோபாஸுக்கு பிறகு எடை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்பது உண்மையா? வாக்கிங் போனால் எடை குறையாது என்றும் சொல்கிறார்களே, நிஜமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ். ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் 52 வயதில் மெனோபாஸ் (மாதவிடாய் நிற் காலம்) நிலையை அடைந்த பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்றாகும். மெனோபாஸ் வயது வரும்வரை காத்திருக்காமல், இள வயதிலேயே உடற்பயிற்சிகள் செய்வதையும், க்ளீன் ஈட்டிங் எனப்படும் ஆரோக்கிய உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவதையும் செய்யச் சொல்லி மருத்துவர்களும் உடற்பயிற்சி ஆலோசகர்களும் அறிவுறுத்துகிறோம். இப்படிச் செய்தால், மெனோபாஸ் காலத்தில் எடை அதிகரித்தாலும் சிரமங்கள் இல்லாமல் சமாளிக்க முடியும். மெனோபாஸ் காலத்தில் எடை அதிகரிப்பது என்பது தவிர்க்க முடியாதது. காரணம், அந்தப் பருவத்தில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரான் ஆகிய முக்கியமான பெண் ஹார்மோன்களின் அளவு வெகுவாகக் குறையும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) மிகவும் மந்தமாகிவிடும். இதன் காரணமாக, வழக்கமாகச் செய்யும் பயிற்சிகள் உடனடி பலனைத் தராது. அவரவர் உடல்வாகுக்கேற்ப மெனோபாஸ் முன்னதாகவோ, பிந்தியோ வரலாம். மெனோபாஸ் காலத்தில் எலும்பு, மூட்டு வலி மற்றும் தசை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இத்தனை நாள் உங்களை ஆரோக்கியமாக உணரவைத்த வாக்கிங் (Walking) பயிற்சி, மெனோபாஸ் காலத்தில் உதவாதது போல உணர்வீர்கள். மெனோபாஸ் கால அவதிகளைச் சமாளிக்க வெறும் நடைப்பயிற்சிமட்டுமே போதாது. வாக்கிங் செய்வதுடன் சேர்த்து தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த வலிமைப் பயிற்சிகளை (Strength training) கட்டாயம் தொடங்க வேண்டும். மிகக் குறைவாகச் சாப்பிடுவதும் மெனோபாஸ் காலத்தில் எந்தப் பலனையும் தராது. சத்துள்ள உணவுகளைச் சரியாக உட்கொள்வது அவசியம்.Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன். ஆன்டிபயாடிக் எடுக்கலாமா? மிகக் குறைவாகச் சாப்பிடுவதும் மெனோபாஸ் காலத்தில் எந்தப் பலனையும் தராது. சத்துள்ள உணவுகளைச் சரியாக உட்கொள்வது அவசியம். நீங்கள் முதலில் மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை (Blood test) செய்து உடலின் தற்போதைய அளவீடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றைச் சரிசெய்ய வேண்டும். இவற்றை எல்லாம் செய்தால் உடல் எடையை உடனடியாகக் குறைத்து விடலாம், பழைய உடல்வாகுக்குத் திரும்பலாம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஆனால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் (Manage weight), இன்ச்லாஸ் (Inch loss) பெறவும் முடியும். மேலும், தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும். எனவே, மருத்துவரைச் கலந்தாலோசித்து, ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப உணவு மற்றும் ஸ்ட்ரெங்த் டிரெய்னிங் பயிற்சிகளுடன் நடைப்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரவும். ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்: சென்னை, ஆழ்வார்பேட்டையில் Creed strength and conditioning studio நடத்துகிறார். 14 ஆண்டுகளாக ஃபிட்னெஸ் கோச்சாக இருப்பவர். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/health/weight-gain-during-menopause-will-walking-no-longer-be-effective



