தேனி, தேனி மாவட்டம் போடியில் இருந்து சென்னைக்கு அதிகளவில் பொதுமக்கள் சென்றுவருவதால் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதற்கட்டமாக கடந்த மே 23-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து போடிக்கு சிறப்பு ரெயில் (06059/60) ஒவ்வொரு சனிக்கிழமையும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் போடியில் இருந்து மாலை 4.45 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் 4 வாரங்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரெயிலினால் பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது என்றும் இதனால் சிறப்பு ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு ரெயில் சேவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது வருகிற 26-ந்தேதி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் முன்பதிவு உடனடியாக தொடங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-boditambaram-special-train-service




