பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்ற வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிமண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை சேதுபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சஸெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" - முதல்வருக்கு EPS கேள்வி அப்போது சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில், "ரூ. 100 கோடி மதிப்பு நிலத்தைப் பதிவு செய்யவில்லை. நிலத்தைப் பதிவு செய்தது சார்பதிவாளர் பாலசுந்தர்தான். அந்தப் பத்திரத்துக்கு ஆவண எண் மட்டுமே வழங்கியுள்ளார் ஜஸ்டின் மணிகண்டன் வழங்கியுள்ளார். இதில் பாலசுந்தர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜஸ்டின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. ஜஸ்டின் மணிகண்டன் தமிழ்நாடு அரசு தரப்பில், "ரூ. 100 கோடி நிலத்தை 2 சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தனர். இதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பத்திரப்பதிவு முடிந்த பிறகு ஆவண எண் மட்டுமே ஜஸ்டின் மணிகண்டனால் வழங்கப்பட்டுள்ளது. 2 சார் பதிவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு சார்பாக மட்டுமே நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது" என கூறிய நீதிபதிகள் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினர். பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/i-did-not-register-palani-temple-owned-land-worth-sub-registrar-reveals




