யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ ஆகிய படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய ஆனந்த் அண்ணாமலை, எழுதி இயக்கியுள்ள படம் ‘காகங்கள்’. இப்படத்தில், யோகிபாபு, கிஷோர், குரு சோமசுந்தரம், விதார்த் மற்றும் லிஜோமோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாயவரம் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. மனித உணர்வுகள் மற்றும் ஆன்மீகத் தேடல் உள்ளிட்டவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டப்பிங், பின்னணி இசை மற்றும் விஎப் எக்ஸ் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத் தொகுப்பு என அனைத்து பணிகளையும் ஆனந்த் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன் தினம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/yogi-babus-kagaangal-shooting-completes-film-crew-celebrates-by-cutting-cake




