சென்னை, 16 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி கூட இல்லாமல் கேப்டனாக இஷான் கிஷன் அசத்தியுள்ளார். தோல்வியற்ற பயணம் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஈஸ்ட் ஜோன் அணி 3-வது முறையாக துலீப் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன், முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக தனது தோல்வியற்ற சாதனைப் பயணத்தை தொடர்ந்து நீட்டித்துள்ளார். தோல்வி இல்லை முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக இஷான் கிஷன் பங்கேற்ற 16 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 2018-ம் ஆண்டு தொடங்கிய அவரது தோல்வியற்ற கேப்டன்சி பயணம் தற்போது 9-வது ஆண்டை எட்டியுள்ளது. சாதனை பட்டியலில் இஷான் முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக போட்டிகளில் தோல்வியை சந்திக்காத வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷன் தற்போது டாப்-10 இடங்களுக்குள் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் மஹிந்த ஹலங்கொட 30 போட்டிகளில் தோல்வியின்றி முதலிடத்தில் உள்ளார். கேப்டனாக 2-வது பட்டம் இஷான் கிஷன் கேப்டனாக வெல்லும் 2-வது முக்கியமான பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2025-26 சீசனில் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர், அந்த அணியை சையத் முஷ்டாக் அலி கோப்பை சாம்பியனாக்கியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/16-matches-not-a-single-defeat-ishan-kishan-shines-as-captain




