தூத்துக்குடி, தூத்துக்குடியில் 37 கிலோ 630 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் சோதனை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வடபாகம் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. 37 கிலோ 630 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல், கைது இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (வயது 47) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 37 கிலோ 630 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/37-kg-of-tobacco-products-seized-in-thoothukudi-one-arrested




