லண்டன், இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 'கிரிக்கெட்டின் தாயகம்' என்று அழைக்கப்படும் லார்ட்சில் அரங்கேறும் முதல் பெண்கள் டெஸ்ட் போட்டி இதுவாகும். 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 285 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 83 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்னும், தீப்தி ஷர்மா 57 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/smriti-mandhana-kaur-hit-half-centuries-india-bowled-out-for-285-runs




