ஊட்டி, ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை இறந்தது. இதுதொடர்பாக சுருக்கு வைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் பலியாவதும். நாட்டு வெடி மற்றும் சுருக்கு வைத்து காட்டுப்பன்றிகள், மான், முயல் போன்றவற்றை வேட்டையாடும் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காடுகள், தேயிலை தோட்டங்கள். தனியார் பட்டா நிலங்களின் எல்லைகளில் சுருக்கு அதிகளவில் வைக்கப்படுகின்றன. இதில் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளும் சிக்கி உயிரிழக்கின்றன. சிறுத்தை இந்தநிலையில் நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி தெற்கு வனச்சரகம் இத்த லார் அருகே அட்டுபாயில் கரிக்காடு பகுதியில். இத்தலார் பகுதியை சேர்ந்த ரகுநாத் என்பவர் தனியார் விளைநிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலம், காப்பு காட்டுக்கு மிக அருகில் உள்ளது. இதற்கிடையே இந்த விளைநிலத்தில் உள்ள வேலியில் சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது பெண் சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கி இருந்தது கண்டறியப் பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில் வன கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தையை மீட்க மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அதன் வயிற்றில் சுற்றியிருந்த சுருக்கு கம்பியை வெட்டியெடுத்து மீட்கப்பட்டது. சிறுத்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கைது இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விவசாயியான சண்முகநாதன் (வயது 57) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தோட்டத்தில் கேரட் பயிரிட்டு வருவதால், அங்கு மான், காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. அதனை தடுக்கவும், அச்சுறுத்தவும் கிளச் வயர் மூலமாக சண்முகநாதன் சுருக்கு வைத்ததும், எதிர்பாராதவிதமாக சிறுத்தை சிக்கி கொண்டதும் தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/leopard-dies-after-getting-stuck-in-barbed-wire-in-nilgiris-farmer-arrested




