டெல்லி, நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம். வட்டி விகிதத்தில் மாற்றமில்லை இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நிதி நிலை கொள்கை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் ஏற்கனவே உள்ள 5.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என்றும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாததால் வீடு, கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/business/no-change-in-repo-rate-reserve-bank




