நெல்லை தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தி.மு.க எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அவரை தி.மு.க முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று சிறைக்கு சென்று சந்தித்தனர்.பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:- பொய் வழக்கு த.வெ.க ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்படுகிறது. த.வெ.க அரசு முழுக்க முழுக்க பா.ஜனதாவின் 'சிலீப்பர் செல்லாக' இயங்குகிறது. பா.ஜனதா மிரட்டுவதற்கு ஏற்ப செயல்படாவிட்டால் தங்களுக்கு வரும் நிதி நின்றுவிடுமோ என்ற பயத்திலேயே த.வெ.க. அரசு செயல்படுகிறது. மக்கள் மீது அரிசி விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என பொருளாதார சுமையை சுமத்தி விட்டு, சட்டமன்றத்தையே ஒரு திரைப்படக் கொட்டகை போலவும், தயாரிப்பு நிறுவனம் போலவும் மாற்றி சினிமாவை வேடிக்கை பார்க்கும் அரசாக இது உள்ளது. 'ஜனநாயகன்' படத்தில் நான்கு அமைச்சர்கள் நடித்துள்ள சூழலில், கரூர் சம்பவத்தின்போது கண்ணீர் விடாதவர்கள் இப்போது அந்த படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். உரிமை மீறல் பிரச்சினை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெளிநடப்பு செய்ய முழு உரிமை உண்டு. ஆனால், 'சட்டமன்றக் கதவுகளை மூடுங்கள்' என முதல்-3 அமைச்சர் விஜய் கூறியது உறுப்பினர்களை சிறை வைப்பதற்கு சமமான ஜனநாயக உரிமை மீறலாகும். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோ சித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும். இதுமட்டுமன்றி, கோவிலுக்கு சொந்தமான நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதும் தான் த.வெ.க. அரசின் நிஜ முகமாகும்.இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/freedom-of-speech-has-been-curtailed-under-the-tvk-government-former-minister-raghupathy-alleges




