கோவை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவரை கலெக்டர் பவன்குமார் மற்றும் அமைச்சர்கள் வரவேற்க உள்ளனர். துணை ஜனாதிபதி கோவை வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கோவைக்கு வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் வருகிற 22-ந் தேதி காலை 11 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுடன், காளப்பட்டி 4 ரோடு சந்திப்பு, கோவில்பாளையம், அன்னூர் பஸ் நிலையம், தென்திருப்பதி 4 ரோடு ஆகிய இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வனக்கல்லூரி விருந்தினர் இல்லம், குஞ்சப்பனை மாவட்ட எல்லை, கஞ்சப் பள்ளி, கரியம்பாளையம் சந்திப்பு, கணியூர் சுங்கச்சாவடி, நீலாம்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் சிங்காநல்லூர், பீளமேடு. சித்ரா, நேரு நகர், சேரன்மாநகர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சின்னியம்பாளையம், நவ இந்தியா, இருகூர் பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டு டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-is-visiting-coimbatore-tomorrow




