சென்னை சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னையில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான புறநகர் ரெயில் சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 1 மணிநேரம் இதேபோன்று, தாம்பரம் வழியாக கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதத்துடன் இயக்கப்படுகின்றன என தகவல் தெரிவிக்கின்றது. இதுபோன்று தாமதமாக இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லக்கூடியவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய ரெயில்களும் ஏறக்குறைய 1 மணிநேரத்துக்கும் மேலாக தாமதம் என தகவல் தெரிவிக்கின்றது. சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/suburban-electric-express-trains-delayed-in-chennai




