முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக ‘தீயவர் குலை நடுங்க' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அவரது நடிப்பில் 'ஓ சுகுமாரி' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. வீர் ஜோடியாக அவர் நடித்துள்ள இந்த படத்தை பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். காதல், நகைச்சுவை மற்றும் கிராமத்து பின்னணியை கதைக் களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தொட்டாலே ஷாக் அடிக்கும் விசித்திரமான குணம் கொண்ட ஒரு பெண்ணை, அவளது ரகசியத்தை மறைத்து திருமணம் செய்துகொடுக்கிறார்கள். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கலகலப்பான கதை. சி.எச்.குஷேந்தர் ஒளிப்பதிவில், பரத் மஞ்சி ராஜூவின் இசையில் படம் உருவாகியுள்ளது. படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், 'ஓ சுகுமாரி' கலகலப்பான படம். இதுபோன்ற கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதேவேளை படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தவும் நினைக்கிறேன். ரசிகர்களை மகிழ்விப்பதே என் தேடல். அதை தொடர்ந்து செய்வேன்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/desire-to-act-in-vibrant-roles-aishwarya-rajesh




