சென்னை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட் டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காலை உணவு திட்டம் 'பெருந்தலைவர் காம ராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலை உணவு வினியோகம் செய்வது தொடர்பாக டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு நிபந்தனைகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. அதில், ரவா உப்புமாவுடன் சாம்பார் உள்ளிட்ட 13 வகை உணவுகளில் இருந்து நாள்தோறும் ஏதேனும் ஒரு உணவு மாணவர்களுக்கு காலை உணவாக வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காலை உணவு 150 முதல் 200 கிராம் எடையுடன் 294 கலோரி ஆற்றல் வழங்கும் விதமாக இருக்கவேண்டும். காலை 7.30 மணிக்குள் பள்ளிகளுக்கு சூடான உணவு (இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்களில் எடுத்து சென்று) வினியோகிக்கவேண்டும். தலைமை ஆசிரியரின் சான்று கிடைத்த பிறகே ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும். உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வு மூலம் கண்காணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/kamaraj-breakfast-scheme-conditions-for-companies-participating-in-the-tender




