கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் வெள்ளிக்கிழமை பலியாகினர். ரெயில் மோதி விபத்து மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற கார் ஒன்று இன்று கோவிந்தபூர் ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற பயணிகள் ரெயில், கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்களும், உள்ளூர் நபர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/train-hits-car-attempting-to-cross-tracks-4-dead




