தவெக அரசு முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட்.6) சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத்தான் இன்று கறுப்புச் சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தோம். தமிழக வேளாண் பட்ஜெட் திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்திருந்தோமோ, அதே திட்டங்களைத்தான் பெயரை மாற்றி புதுத்திட்டங்கள் போல வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார்கள். இந்தப் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியின்போது இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் முழு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்து எதுவும் செய்யவில்லை. மேகதாது காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்கிறேன் என்கிறார். அங்குள்ள முதலமைச்சர் வர வேண்டாம் என்கிறார். மேகதாது விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நாங்கள் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துடன் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று இந்த அரசுக்கு திமுக சார்பாகக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கும் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டேங்கிறார். உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக எப்போதும் துணை நிற்கும்" என்று பேசியிருக்கிறார். "தவெகவின் பட்ஜெட்டிற்கு ஜீரோ மதிப்பெண்; ஆனால், நிதியமைச்சருக்கு திமுகவின் நன்றி!" - உதயநிதி ஸ்டாலின் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/udhayanidhi-stalin-about-tvk-agri-budget




