அங்காரா, துருக்கி தலைநகர் அங்காராவில் இன்று, நாளை (07.07.2026 மற்றும் 08.07.2026) நேட்டோ உச்சிமாநாடு நடைபெறுகிறது. நேட்டோ கூட்டணியின் 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பாதுகாப்பு செலவினங்கள், உக்ரைனுக்கான ஆதரவு, ராணுவ உற்பத்தி மற்றும் பரந்த பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சிமாநாட்டின் முதல் நாள், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) வழங்கும் தொடக்க உரையுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, நேட்டோ கூட்டணிக் நாடுகளின் அரசு மற்றும் நாட்டுத் தலைவர்கள் உரையாற்றுகின்றனர். பின்னர் கூட்டணிக் நாட்டுத் தலைவர்கள், நேட்டோ பொதுச்செயலாளர் மற்றும் துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நேட்டோ மாநாட்டு நிகழ்ச்சி நிரல் விவரங்கள்:- காலை 10.00 மணி: பாதுகாப்புத்துறை மன்றத்தில் நேட்டோ மற்றும் நட்பு நாடுகளின் முக்கிய பாதுகாப்பு அறிவிப்புகள். மதியம் 12.45 மணி: ஏடிஓ காங்கிரேசியம் வளாகத்தில் நேட்டோ பொதுச் செயலாளரின் முதன்மை உரை. மதியம் 2 மணி: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஆகியோரின் கூட்டறிக்கை. மாலை 5 மணி முதல்: நேட்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் அவசரக் கூட்டங்கள். மாலை 5.30 மணி – துருக்கி பாதுகாப்பு அமைச்சர் வழங்கும் பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி. மாலை 6.30 மணி – நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் துணைவர்களுக்கான வரவேற்பு மற்றும் விருந்து. இரவு 7.45 மணி – நேட்டோ–உக்ரைன் கவுன்சிலின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்திலான பணியமர்வு விருந்து. இரவு 8.15 மணி – வட அட்லாண்டிக் கவுன்சிலின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மட்டத்திலான பணியமர்வு விருந்து மற்றும் பிரதான வேலைத்திட்ட இரவு விருந்துகள் நடைபெற உள்ளன. ஜூலை 8-க்கான அட்டவணை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கான அனுமதி மற்றும் நிகழ்வுகளுடன் இரண்டாம் நாள் நடவடிக்கைகள் தொடங்கும். காலை 11 மணிக்கு கூட்டணிக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வக் கூட்டுப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, காலை 11:15 மணிக்கு அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள் நிலையிலான 'வடக்கு அட்லாண்டிக் கவுன்சில்' (North Atlantic Council) கூட்டம் நடைபெறும். பாதுகாப்பு முதலீடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் உக்ரைனுக்கான தொடர் ஆதரவு உள்ளிட்ட நேட்டோவின் எதிர்கால முன்னுரிமைகள் குறித்த அறிவிப்புகளுடன் இந்த உச்சிமாநாடு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/nato-summit-2026-schedule-full-agenda-for-ankara-meeting-on-july-7-8




