தாராபுரம் இடைத்தேர்தலுக்காக தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக சாடியிருந்தார். CM Vijay 'முதல்வர் விஜய் பேசியதாவது, 'ஆட்சியமைத்த 100 நாள்களில் மாநில அளவில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். 2026 தேர்தலில் மக்களெல்லாம் தவெகவுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, இன்னமும் நாம்தான் முதல்வராக இருக்கிறோம். நம்முடைய குடும்பம் அதிகாரத்தில் இருக்கிறது என நினைக்கும் மன்னராட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது. CM Vijay அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் ஆரம்பத்த கட்சியையும் மறந்துவிட்டு திமுகவுடன் சுயநலமாக கூட்டு சேர்ந்து சுற்றுபவர்களும் நாம் கிடையாது. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாமில்லை எனக் கூறித்தான் அரசியலுக்கே வந்தோம். அதனால்தான் நம் கூட்டணியின் பெயர் மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி. நாம் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம். கிறிஸ்துமஸூக்கும் பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்வோம். திமுக மாதிரி பம்மி பதுங்கி வேடம் போட்டு இருக்க மாட்டோம். அண்ணா காலத்தில் சாதாரண ஆட்களை நிறுத்தித்தான் அப்போதைய மன்னர்களை தோற்கடித்ததாக திமுக பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அண்ணா காலத்திலும் அதுதான் நடந்தது. எம்.ஜி.ஆர் காலத்திலும் அதுதான் நடந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது. திமுக பொதுச்செயலாளருக்கு தலைமையோடு என்ன பிரச்னையோ. திமுக தலைமையின் மண்டையில் குட்டுவதைப் போலவே பேசியிருக்கிறார். விஜய் திமுக தலைவர் கொளத்தூர் மக்கள் தனக்கு வாக்களிக்காததற்காக நன்றி கூறுகிறார். என்ன ஒரு பெர்பார்மென்ஸ் பாருங்க. ஷூட்டிங் போய்தான் நடிப்பார்கள். இவர் மேடையில் பேசி பேசியே நடிக்க பழகிவிட்டார் போல. அதற்கும் விஜய்தான் காரணமென நம்மை ஒருமையில் `அவன். இவன்' எனப் பேசுகிறார். உங்களின் பரம்பரை சொத்து ஆபாசநதியை விட்டும் பேச விடுங்கள். நீங்கள் தரம் தாழ்த்திப் பேசப் பேச மக்கள் நம் தரத்தை உயர்த்திக் கொண்டே இருப்பார்கள்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/cm-vijay-speech-at-dharapuram




