டெஹ்ரான், அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது. ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. ஈரானின் டிரோன் படகுகள் உள்ளிட்ட கடற்படை சொத்துகள் வைக்கப்பட்டுள்ள கேஷம் தீவிலும், விமான தளமும், அணுஆயுத தளமுமான இஸ்பஹான் மாகாணத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் குசேஸ்தான் மாகாணம், பார்ஸ் மாகாணம் ஆகியவற்றிலும் வெடிச்சத்தம் கேட்டது. அவாஸ் பகுதியில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ராணுவ தளம் அருகே தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. ராணுவ தளத்தில் இருந்து கரும்புகை வானை நோக்கி எழுந்தது. இதற்கிடையே, மற்றொரு முக்கியமான வர்த்தக வழித்தடத்தை மூடப்போவதாக ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி இயக்கத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், கப்பல்கள் மீதான அவர்களது தாக்குதல் தொடர்ந்தால், ராணுவ ரீதியாக மிகப்பெரிய தண்டனை அளிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/us-attacks-iranian-naval-base




