ஹராரே, ஜிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து 2-வது போட்டி 25-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 26-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணி தொடர்பாக கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது, இங்கிலாந்தில் நாங்கள் ஒரு கடினமான காலகட்டத்தைச் சந்தித்தோம். ஆனால், அதிலிருந்து பல சாதகமான விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். எங்களில் சிலர் இங்கு (ஜிம்பாப்வே) அமுதல் முறையாக விளையாடுகிறோம். எனவே, எவ்வளவு விரைவாக நாம் சூழலுக்கு ஏற்ப மாறுகிறோமோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவோம். இந்திய வீரர்கள் தோல்விக்கு அஞ்சக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், உங்கள் மனதில் அத்தகைய எண்ணங்கள் இருக்கும்போது, நீங்கள் உங்களைக் தற்காத்துக் கொள்ளவே விளையாடுவீர்கள். அந்தப் பயம் இல்லாதபோது, உங்களால் உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் ஒரு அணியாக நாங்கள் எப்படி விளையாடப் போகிறோம் என்பது குறித்து நிறைய விவாதித்து வருகிறோம். இது ஒரு சிறந்த அனுபவம், ஏனென்றால் இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை. இது ஒரு சவாலான காலகட்டம், இதை எவ்வளவு விரைவாகக் கடந்து வருகிறீர்களோ, அந்த அளவிற்கு ஒரு அணியாக நீங்கள் மேம்படுவீர்கள். இவ்வாறு ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/indian-players-should-not-fear-defeat-shreyas-iyer




