அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை இந்த பயங்கரவாத கும்பல்கள் கடத்தி வருகின்றன. 308 பேர் மீட்பு இதனிடையே, இந்த ஆண்டு பிபரவரி மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் நைஜர், குவாரா மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களில் 308 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது. கடத்தப்பட்ட பொதுமக்கள் நைஜர் மகாணம் கனிஜி லேக் தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/nigeria-army-rescues-308-people-kidnapped-by-terrorists




