ஊட்டி, நீலகிரி மலைப்பகுதிகளுக்கே உரிய, அழியும் அபாய பட்டியலில் உள்ள அரிய வகையான லங்கூர்’ குரங்குகள், தற்போது குஞ்சப்பனை - மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் கூட்டமாகத் தென்பட தொடங்கியுள்ளன. வறட்சியால் வெளியேறும் விலங்குகள் நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது கடுமையான வறட்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு, பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடர்ந்த காடுகளுக்குள் வாழும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டை விட்டு வெளியேறி வன எல்லை பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன. அதிசய தோற்றம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் அடையாளமாக திகழும் இந்த லங்கூர் குரங்குகள், உடல் சாம்பல் (மற்றும் பளபளப்பான கருப்பு) நிறத்திலும், முகம் மட்டும் கரிய கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும். கோத்தகிரி, ஊட்டி, மசினகுடி மற்றும் மந்தூர் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில், உயரமான மரங்களின் உச்சிகளில் மட்டுமே இவை கூட்டமாக வாழக்கூடியவை இந்த நிலையில் மனிதர்களை கண்டால் அச்சப்படும் அரிய வகை லங்கூர் குரங்குகள் குஞ்சப்பனையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களில் தென்பட தொடங்கியுள்ளன. இவற்றை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/endangered-langurs-spotted-along-kotagiri-road




