கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை தொடங்க உள்ள நிலையில், அழைப்பு கடிதம் வரப்பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இயக்குனர் முன்னோளி தெரிவித்தார். ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை (வெள்ளிக்கி ழமை) ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இந்த முகாம் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை கோவை ராணுவ ஆள்சேர்ப்பு மைய இயக்குனர் கர்னல். எஸ்.பி முன்னோளி, கலெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அழைப்பு கடிதம் பின்னர் ராணுவ ஆள்சேர்ப்பு மைய இயக்குனர் கூறியதாவது:- கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் வரப்பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இம்முகாமில் வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் இடம், ஓட்டப்பந்தய சுற்று வட்ட பாதை, தகுதி தேர்வுக்கு தேவையான இட வசதிகள், மின்சார வசதி, இணையதள வசதி, கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/army-recruitment-camp-tomorrow-at-krishnagiri




