சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறி வைத்த தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ளது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றுள்ளார். இது மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதை தற்செய லானது என எடுத்துக்கொள்ள முடியாது. கல்வி வளாக அமைதி என்பது மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதி யற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜிலியம்பாறை வட்டாட் சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (சனிக்கி ழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/marxist-communist-party-to-hold-a-protest-today




