சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான 2.6 கிலோ 24 காரட் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில், 2 இலங்கை பயணிகள், 2 சுங்கத்துறை ஹவில்தார்கள் மற்றும் எக்ஸ்ரே பிரிவைச் சேர்ந்த 2 ஊழியர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோதனை துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த 2 இலங்கை பயணிகள், கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றனர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. அவர்களை எக்ஸ்ரே பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற சுங்கத்துறை ஊழியர்கள், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போலி எக்ஸ்ரே அறிக்கையை காட்டி தங்கம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. கைது இதனை கண்காணித்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள் மீண்டும் எக்ஸ்ரே பரிசோதனை செய்ததில், இருவரது மலக்குடலுக்குள் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்து, கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-worth-4-crore-smuggled-inside-stomachs-6-arrested-at-chennai-airport




