நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான் பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கினர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேசியத் தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்குக் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" - உதயநிதி கண்டனம் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். ஆதவ் அர்ஜுனா மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!" என்று பதிவிட்டிருக்கிறார். சென்னை மாணவர்கள் போராட்டம்: வலுகட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை; களத்தில் என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/tvk-aadav-arjuna-about-delhi-protest




