சண்டிகார், அரியானா மாநிலம், பரிதாபாத்தில் சீஹி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தவறி விழுந்தார். நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பிறகு இரவு 7.45 மணிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. பிறகு இரவு 9.05 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3.50 மணிக்குச் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். உடனடியாக சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையின் போது சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/tragedy-strikes-a-3-year-old-girl-who-fell-into-a-200-foot-deep-borewell




