கோவை கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் விடுதியில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதனை சக மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அந்த மாணவியின் உடல் பக்கெட்டுக்குள் (வாளிக்குள்) தலைகீழாக கவிழ்ந்த நிலையில் கிடந்துள்ளது. அதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்றோர் சந்தேகம் இதுபற்றி அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என திட்டவட்டத்துடன் கூறினார். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-death-of-a-female-student-at-the-agricultural-university-hostel




