Article complet
நேற்று (ஜூன் 21, 2026) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். சிலருக்கு வாய், மூக்கில் ரத்தமும் வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நான்கு பேர் உயிரிழப்பு: சிகிச்சைக்குப் பலனளிக்காமல் நேற்று இரண்டு பெண்களும், இன்று இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவுசட்டமன்றம்: `இணைந்தும், இணையாமலும்' வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி | Live News Updates கைது: இந்த விபத்து காரணமாக இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் உரிமையாளர், மேலாளர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக் குழு: இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இவர்கள் 24 மணிநேரத்திற்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண நிதி: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அரசு செலவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



