டல்லாஸ், 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இறுதிகட் டத்தை எட்டி விட்ட இந்த கால்பந்து திருவிழாவில் இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் முதலாவது அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான பிரான்ஸ், 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினை எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடர்பாக ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவன்டே கூறும் போது. 'இந்த போட்டியை இறுதிப் போட்டிக்கு முந்தைய இறுதிசுற்று என்று சொன்னால் மிகையாகாது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் திறன் கொண்ட அணிகளில் நாங்களும் ஒன்று. தற்போது எங்களது முழு கவனமும் பிரான்ஸ் மீதே உள்ளது. அவர்கள் அபார திறமை கொண்ட அணி என்பதை அறிவோம். அதே நேரத்தில் சமீபத்திய ஆண்டுகளில் அவர்களை இரண்டு அரையிறுதியில் தோற்கடித்த ஒரே அணி நாங்கள் தான். நல்ல பார்மில் உள்ள அவர்களை வீழ்த்த நாங்கள் எங்களது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/we-must-deliver-our-best-performance-spain-coach




