திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என சட்டசபை உறுப்பினர் கே.என் நேரு கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், பல இடங்களில் பொது மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனையெல்லாம் சரிசெய்து தரமான பொருட்களை வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுககாரர்கள் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரிலீஸ் போடமுடியும் என்பது மக்களுக்கு தெரியும், முதன்முறையாக சட்டப்பேரவை வந்த உறுப்பினர்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைக்கிறோம். மக்கள் பிரச்சினை பற்றி முன்வைக்கிறோம். எதிர்த்தரப்பின் கருத்துக்கும் பதில் சொல்லுகிறோம். ஆனால் இவர்கள் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவது, ஓடுவது மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவது என்று சட்டப்பேரவையைச் சண்டை நடத்தும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முதலில் மாண்பு இருக்கிறதா என்பது தெரிய வேண்டும். சட்டமன்றத்துல எப்படியாவது சண்டை நடக்கணும்னு எதிர்க்கட்சியினர் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டப்பேரவையில் அனைவருக்குமான கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு, கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது தெரியும், அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டீர்கள். பேரவைத் தலைவர் அவரது பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/former-ministers-are-using-inappropriate-language-in-the-assembly-minister-ramesh




