சென்னை, தலைமைச் செயலகத்தில், பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 459 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு துறைகளுக்கு உதவி பொறியாளர்கள், வேளாண் அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், இளநிலை மேலாளர்கள், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்கு 459 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இதற்கான சான்றிதழை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணிநியமன ஆனைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கொடுத்தார். அப்போது, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, துணைச் செயலாளர் ருக்மிணி ஆகியோர் உடன் இருந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-issues-appointment-orders-to-459-candidates-selected-through-tnpsc




