ஆரணி, ஆரணி அருகே விவசாய நிலத்தில் மது அருந்திய நண்பர்கள் கறிசமைத்து சாப்பிட்டனர். அதன்பின் பாத்திரத்தை கழுவுவதற்காக போதையில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலியானார். தொழிலாளி ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த பூங்காவனம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இவர் மற்றும் இவரது 3 நண்பர்கள் சேவூர் பைபாஸ் சாலையையொட்டி உள்ள விவசாய நிலத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களே கோழி மற்றும் ஆட்டு இறைச்சி எடுத்துச் சென்றதாகவும் அந்த இடத்திலேயே கல்லால் அடுப்பு மூட்டி போதையிலேயே சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அதன்பிறகு 4 பேரும் உணவு பாத்திரங்களை கழுவி உள்ளனர். கடாயை கழுவுவதற்காலிக பூங்காவனம் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இறங்கி தண்ணீரை எடுக்க முயன்றார். அப்போது அவர் கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் வெளியே வராததால் உடன் வந்த நண்பர்கள் கிணற்றில் குதித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மீட்பு பணி இது குறித்து அவர்கள் 108 அவசர ஆம்புலன்ஸ்க்கும். ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் படைவீரர்கள் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி பூங்காவனத்தின் உடலை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-worker-died-after-accidentally-falling-into-a-well-while-washing-a-vessel-used-to-cook-meat




