சென்னை, அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அடையாறு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர்/ அடையாறு, தரைதளம், 110/33-11 கி.வோ, வேளச்சேரி துணை மின் நிலைய வளாகம், வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி, சென்னை - 42 அமைந்துள்ள விலாசத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்/சென்னை மின்பகிர்மான வட்டம் /அடையாறு (தெற்கு-II) கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/electricity-consumer-grievance-redressal-meeting-tomorrow-in-adyar-division




