தென்காசி, தென்காசி நகராட்சி 23-வது வார்டு பா.ஜ.க. பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நகராட்சி பா.ஜ.க. பெண் கவுன்சிலர் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கோபாலகிருஷ்ணன். இவரும் சென்னையில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக கூறப்படும் சுனிதா (வயது 45) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுனிதா தென்காசி நகராட்சி 23-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலராக இருந்து வந்தார். விஷம் குடித்து தற்கொலை கடந்த 2 நாட்களுக்கு முன் தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது சுனிதாவுக்கும், அவரது மூத்த மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுனிதாவை, முத்துகோபாலகிருஷ்ணன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சுனிதா நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியில் வைத்து வயலுக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/bjp-woman-councilor-commits-suicide-by-consuming-poison




