சென்னை, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள 'மெட்ராஸ் பார் அசோசியேஷன்' என்ற பழமையான வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. நீதிமன்றங்களின் எண்ணிக்கை இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "சட்டத்துறை மற்றும் நீதித்துறை நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது. வக்கீல்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. 200 வழக்குகளுக்கு ஒரு நீதிமன்றம் என்ற வகையில் முன்னுரிமை வழங்கி கீழமை நீதிமன்றங்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்படும். இதனால், வழக்குகளில் தேக்கம் குறையும். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஓரிரு ஆண் டுகளில் முடிக்கப்படும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஜான் சத்தியன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர். கமலநாதன், செயலாளர் ஜெ.போத்திராஜ், பொருளாளர் வி.டி. பாலாஜி, நூலகர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-courts-will-reduce-case-backlog-minister-nirmal-kumar




