சென்னை, 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, 3-வது சுற்று மற்றும் காலிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் முறை உலக தரவரிசையில் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ள அணிகளே அரையிறுதியை எட்டும் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பே பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. அந்த கணிப்புகள் தற்போது நனவாகியுள்ளன. இதன்மூலம், 1992-ம் ஆண்டு பிபா உலக தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும். முன்னாள் சாம்பியன் மேலும், அரையிறுதியை எட்டியுள்ள பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் முன்னாள் சாம்பியன் அணிகளாகும். இதனால், அரையிறுதியில் இடம்பெற்றுள்ள நான்கு அணிகளும் முன்னாள் உலக சாம்பியன்கள் என்ற சிறப்பும் இந்த தொடருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 1970 மற்றும் 1990 உலகக்கோப்பை தொடர்களில் மட்டுமே இத்தகைய நிகழ்வு அரங்கேறியிருந்தது. தற்போது, அந்த வரலாறு மூன்றாவது முறையாக மீண்டும் நிகழ்ந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/france-argentina-spain-england-a-rare-world-cup-record-of-being-staged-for-the-3rd-time




