Article complet
நேற்று வெள்ளை மாளிகையில் ஈரான் போர் குறித்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பேட்டியில், "அவர்கள் நம்மை மதிக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. ஒருவேளை மதிக்கவில்லை என்றால், நிலைமை மோசமாகும். ஆனால், அவர்கள் நம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். கடந்த 47 ஆண்டுகளாக இதைச் செய்திருக்க வேண்டிய பல அதிபர்கள் நமக்குக் கிடைத்தார்கள். ஆனால் யாருமே இதைச் செய்யவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். ஈரான் போர்'உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வர வேண்டும்' - அமெரிக்க செனட்டின் செக்; ட்ரம்புக்கு நெருக்கடி இது பொருளாதார மந்தத்தை விடப் பெரிய விஷயம். பொருளாதார மந்தம் என்பது மிகவும் மோசமானதுதான். ஆனால், அணு ஆயுதங்கள் அதைவிட மிக வேகமாகப் பேரழிவை ஏற்படுத்திவிடும். நாம் இப்போது கையாளும் விதம் பொருளாதார மந்தத்திற்கு நேர் எதிரானது. நாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். இதற்கான புள்ளிவிவரங்களும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை இதற்கு முன்பு யாரும் பார்த்திராத அளவுக்குக் குறைந்துள்ளது. நாம் இதைத் தொடங்குவதற்கு முன்பு விலை எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவுக்குத்தான் இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறேன்... எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், ஓரளவுக்கு அதே அளவில் தான் இருக்கிறது. நான் இது பொருளாதார மந்தத்தை ஏற்படுத்தும் என்று சொல்லவில்லை, 'ஏற்படுத்தக்கூடும்' என்றுதான் சொன்னேன். மேலும், நான் ஹெர்பர்ட் ஹூவர் போன்ற ஒரு அதிபராக இருக்க விரும்பவில்லை என்றும் கூறினேன். உலக பொருளாதார மந்தநிலைShare Market: உங்க Portfolio-ல் எத்தனை பங்குகள் இருக்கலாம்? 50 பங்குகளே அதிகமா? ஏனெனில், அவர் 'மகா பொருளாதார மந்தம்' நிலவிய காலத்தில் ஆட்சியில் இருந்தவர். அந்தச் சமயத்தில் பல மோசமான விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ஒருவேளை நடந்தால்... அதுமட்டுமன்றி, ஈரான் தங்களது ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை என்றாலோ அல்லது சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ, நான் என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாகச் செய்வேன்" என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



